Friday, January 3, 2014

SWOT யினால் மாணவர்களுக்கு இலவசமாக 60,000/= பெறுமதியான புத்தகங்கள் பெற்று கொடுக்கப்பட்டது.

                           தில்லையடியின் சமூக சிறகுகள் என்ற பெயருடன் கடந்த 3 மாதங்களாக செயற்பட்டு வரும் எமது SWOT-Thillayadi அமைப்பானது கல்வி கற்கும் மாணவர்களுக்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல உதவிகளை செய்துவருகிறது.

                           அதன் அடிப்படையில் தில்லையடியை சேர்ந்த 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு  தேவையான  அப்பியாச கொப்பிகளும் ஏனைய பாடசாலை உபகரணங்களும் JAFFNA MUSLIMS ASSOCIATION - UK உடன் இணைந்து இன்று (03-01-2014) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

                         இங்கு JMA அங்கத்தவர்களான பாசில், ஜைரூஸ் , கைஸ் அவர்களும் வட மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் அவர்களும், தில்லையடி கிராம சேவகர் நிப்ராஸ், அவர்களும் TOSL செயலாளரான தில்ஷான் அவர்களும் மேலும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் சுமார் 60,000/= பெறுமதியான புத்தகங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.




























Tuesday, December 10, 2013

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு SWOT யினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு.

இன்று மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தில்லையடி SWOT தொண்டர் குழுவினால் மனித உரிமைகள் சம்மந்தமாக பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்ட்டது. இந்த கருத்தரங்கிற்கு பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது .

இது  புத்தளம் WODEPT நிறுவனத்தின் அனுசரணையுடன் செல்வி  ஜெயந்தி ஆசிரியரின் ஆதரவில் நடைபெற்றது. இதில் வட மாகாண சபையின் உறுப்பினர் திரு அஸ்கர் MMC அவர்கள் கௌரவ விருந்துனராக பங்கேற்றார் என்பதும் குறிப்பிடதக்கது.


SWOT Thillayadi

SWOT Thillayadi

SWOT Thillayadi


SWOT Thillayadi - Mafas deen

SWOT Thillayadi

SWOT Thillayadi
SWOT Thillayadi
SWOT Thillayadi
SWOT Thillayadi
SWOT Thillayadi
SWOT Thillayadi


Friday, November 29, 2013